ஓரிடத்தில் தொடர்ந்து தங்கமுடியாத
.நிச்சயமற்ற பேரவலத்தில் அகதிகள்!
களநிலைமை மோசமாக இடம் பெயர்வும் அதிகரிக்கிறது
கிளிநொச்சி அரச அதிபர் நிலைமையை விவரிக்கிறார்
[ Posted on : Sun Aug 17 6:57:58 BST 2008]
.இன்று தங்கியிருக்கும் இடத்தில் நாளைக்கும் தொடர்ந்து இருக்க முடியுமா என்ற நிச்சயமற்ற, நிலையற்ற, பதற்றமுற்ற பேரவல நிலையிலேயே வன்னியில் மக்கள் நாள்களை கழிக்க நேரிட்டுள்ளது. களநிலைமை மோசமடைய, மோசமடைய மக்களின் அன்றாட வாழ்க்கையும் மேலும் மேலும் சீரழிகிறது.[விரிவு]
.ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சைக்கு
இன்று 2,86,000 மாணவர்கள் தோற்றுகின்றனர்
வன்னியில் இடம்பெயர்ந்த மாணவருக்கு மாற்று ஏற்பாடு
[ Posted on : Sun Aug 17 6:57:34 BST 2008]
.ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடளாவிய ரீதியில் நடைபெற வுள்ளது. இந்தப் பரீட்சைக்கு மொத்தம் 2லட்சத்து 86ஆயிரத்து 807 மாணவர்கள் தோற்றுகின்றனர். இவர்களில் தமிழ்மொழி மூலத்தில் இருந்து 70 ஆயிரத்து 323 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.[விரிவு]
.யாழ்.முன்னரங்க நிலைகளில் 2 நாள்களாக
கடும் மோதல்கள்; நாச்சிக்குடாவிலும் சண்டை
[ Posted on : Sun Aug 17 6:57:15 BST 2008]
.யாழ்ப்பாணத்தின் முன்னரங்க நிலைக ளில் தொடர்ந்து மோதல்கள் இடம் பெற்று வருவதாக படைத்தரப்பு அறிவித்துள்ளது. கிளாலி மற்றும் நாகர்கோயில் முன்ன ரங்க நிலைகளில் வெள்ளிக்கிழமை இடம் பெற்ற மோதல்களில் விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். இரு படையினர் காயமடைந்தனர் என்றும் படைத்தரப்பு தெரிவித்தது.[விரிவு]
.பாலமோட்டைப் பகுதியில் மும்முனைத்
தாக்குதலை முறியடித்ததாக புலிகள் அறிவிப்பு
[ Posted on : Sun Aug 17 6:56:52 BST 2008]
.வவுனியா பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் மூன்று முனைகளில் படையி னர் மேற்கொண்ட ஊடுருவல் தாக்குதல் முயற்சியை முறியடித்து விட்டதாக விடு தலைப்புலிகள் அறிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை தொடக்கம் தொடர்ந்து இடம்பெற்ற இந்த மோதல்க ளில் வெள்ளிக்கிழமை மாலை படையின ரின் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.[விரிவு]
குடாநாட்டு மக்களில் பலருக்கு உரிய நேரத்தில் உரிய சிகிச்சை இல்லை;
மிகப் பலர் நிரந்தரமாக கண்பார்வையை இழக்கக்கூடும் என்ற நிலை
[ Posted on : Sun Aug 17 6:56:15 BST 2008]
அதிர்ச்சி தரும் தகவல்கள் இவை. இதனைப் படித்ததும், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை பெற முடியாமல் திண்டாடும் நோயாளர் பலருக்கு ""பொத்துக் கொண்டு'' கோபம்வரும். ஏன் சிலர் திட்டித் தீர்க்கவும் செய்வர். பலரது வாழ்க்கையை இருளாக்கி விடும் ஆபத்து நிறைந்த இந்த விவகாரம் குறித்து மேலும் பீடிகை போட விரும்பவில்லை.
[விரிவு]
காந்திக்காக ஏங்கும் உலகு
[ Posted on : Sun Aug 17 6:55:48 BST 2008]
மகாத்மாகாந்தி என்றும் "தேசபிதா' என்றும் இன்றளவும் மக்களால் அன்போடு அழைக்கப்படுபவர் அண்ணல் காந்தியடிகள். ஆனால் அவரோ தான் அவ்வாறு அழைக்கப்படுவதை தன் வாழ்நாள் முழுவதும் தவிர்க்கவே விரும்பினார். சென்ற இடமெல் லாம் இடைவிடாத மக்களின் ஏகோபித்த இக் கோஷங்களிடையே அவர் நினைத்தது நடை பெறாமல் போனது.[விரிவு]
யாழ்ப்பாண மக்கள் குறிப்பாக வலி. வடக்கு மக்கள் சிந்திக்கவேண்டிய தருணம் வந்துவிட்டது. காங்கேசனிலுள்ள சிமெந்து ஆலைகளில் ஒன்றை மீளவும் இயக்குவதற் கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. காங்கேசனிலுள்ள லங்கா சிமெந்து ஆலை ஏற்கனவே இந்தியாவின் முன்னணி நிறுவ னங்களுள் ஒன்றான "பிர்லா' நிறுவனத் திற்கு வழங்கப்பட்டுவிட்டது. [விரிவு]
அரச பயங்கரவாதத்தால் ஜே.வி.பியை
அடிபணிய வைக்க ஒருபோதும் முடியாது
பிரசாரச் செயலர் விஜித ஹேரத் உறுதி
[ Posted on : Sun Aug 17 6:54:54 BST 2008]
""அரச பயங்கரவாதத்தால் ஜே.வி.பி.யினை அடிபணிய வைப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. அரசு மறுபிறவி எடுத்தாலும் ஜே.வி. பியை அடிபணிய வைக்கமுடியாது. எத்தகைய அழுத்தங் களையும் முறிய டிக்கும் வல்லமை எமக்குள்ளது'' இவ்வாறு ஜே.வி.பி.யின் பிரசாரச் செய லாளரும் கம்பஹா மாவட்ட எம்.பியுமான விஜித ஹேரத் தெரிவித்தார். [விரிவு]
கப்பலில் சமாசம் எடுத்து வந்த சிமெந்து
நாளை முதல் ப.நோ.கூ.சங்கங்களுக்கு விநியோகம்
[ Posted on : Sun Aug 17 6:54:42 BST 2008]
யாழ்.மாவட்ட விவசாய நுகர்ச்சிக் கூட்டுறவுச் சமாசம் கொழும்பிலிருந்து தருவித்த சிமெந்து நாளை திங்கட் கிழமை தொடக்கம் பல நோக்குக் கூட் டுறவுச் சங்கங்கள் ஊடாக விநியோ கிக்கப்படவுள்ளன.[விரிவு]
வன்னி நிலைமை குறித்து அரச அதிபர்களுடன்
அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடினார்
[ Posted on : Sun Aug 17 6:54:28 BST 2008]
வன்னிப் பெரு நிலப்பரப்பின் தற் போதைய நிலைமை குறித்து அந்தப் பிரதேச அரச அதிபர்களுடன் வடக்கு விசேட செயலணிக் குழுத்தலைவ ரும் சமூக சேவைகள் மற்றும் சமூநலத் துறை அமைச்சருமான டக்ளஸ் தேவா னந்தா நேற்று முன்தினம் கலந்துரை யாடினார்.[விரிவு]
தென்மராட்சியில் அனர்த்த நிவாரண
கொடுப்பனவுக்கு 16 பேர் தெரிவு
[ Posted on : Sun Aug 17 6:53:44 BST 2008]
தென்மராட்சிப் பிரதேசத்தில் தற் செயல் அனர்த்த நிவாரணத்திற்கு விண்ணப்பித்தவர்களில் 16 பேருக் கான கொடுப்பனவு பிரதேச செயல கத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.[விரிவு]
பருத்தித்துறை நகரப் பொதுச்சந்தை:
முந்திய இடத்திலேயே நிர்மாணிக்கப்படும்
முதற்கட்ட வேலைகள் அனேகமாக அடுத்த வாரத்தில்
[ Posted on : Sun Aug 17 6:53:05 BST 2008]
பருத்தித்துறை நகர பொதுச்சந் தைக் கட்டடம் மீள் நிர்மாணிக்கப்பட வுள்ளது. சந்தைக் கட்டடம் அது முன் னர் இருந்த இடத்திலேயே நிர்மாணிக் கப்படும் என்று பிரதேச செயலாளர் இரா வரதீஸ்வரன் தெரிவித்தார்.[விரிவு]
பருத்தித்துறை கரையோரப் பிரதசேத்தில் நிலவும்
குடிதண்ணீர் பிரச்சினை தீர செஞ்சிலுவைச்சங்கம் உதவும்
[ Posted on : Sun Aug 17 6:52:48 BST 2008]
பருத்தித்துறை கரையோரப் பிர தேசத்தில் நிலவும் குடிதண்ணீர் பிரச்சினையை நீக்கும் பொருட்டு செஞ்சிலுவைச் சங்கங்களின் சர்வ தேச சமாசம் நீர் வழங்கல் திட்டம் ஒன்றை நடைமுறைப் படுத்தவுள்ளது.[விரிவு]
சி.டி.எம்.ஏ. பாவனையாளர்களில் இதுவரை
600 பேருக்கு இணைப்புக் கிடைத்தது
[ Posted on : Sun Aug 17 6:52:36 BST 2008]
குடாநாட்டில் சி.டி.எம்.ஏ. தொலை பேசிப் பாவனையாளர்களில் பத்து வீதமானவர்களுக்கு மீளவும் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று "ரெலிக்கொம்' வட்டாரங்கள் தெரிவித்தன .[விரிவு]
வவுனியாவில் கிளைமோர்;
படையினர் 2பேர் பலி!
[ Posted on : Sun Aug 17 5:28:31 BST 2008]
வவுனியா, இரணைஇலுப்பைக் குளம் பகுதியில் நேற்று முற்பகல் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதலில் 2இராணுவத்தி னர் கொல்லப்பட்டனர் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.[விரிவு]
லண்டன் வீதிச் சண்டையில் தமிழ் இளைஞன் கொலை;
மற்றொரு தமிழ் இளைஞன் பொலிஸாரால் கைது
[ Posted on : Sun Aug 17 5:28:16 BST 2008]
கொலைக் குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை லண்டனில் பொலிஸார் கைது செய்துள்ளனர். லண்டனின் வீதியில் நடந்த குழு மோதலில் 17 வயது இளைஞர்ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டே அந்த இளைஞர் கைது செய் யப்பட்டுள்ளார்.[விரிவு]
கச்சதீவில் இந்தியக் கொடியை ஏற்றுவதற்கு
செல்ல முனைந்தவர்கள்பொலீஸாரால் கைது
[ Posted on : Sun Aug 17 5:28:01 BST 2008]
கச்சதீவில் இந்தியத்தேசியக் கொடியை ஏற்றுவதற்காக இந்து மக்கள் கட்சித் தொண் டர்கள் மேற்கொள்ளவிருந்த பயணத்தை பொலீஸார் தடுத்து நிறுத்தினர்.[விரிவு]
வீதியில் நடந்து சென்ற எம்.கே. நாராயணனை
வெள்ளைவான்கடத்தாமல் விட்டது அதிர்ஷ்டமே!
குல தெய்வத்துக்கு அவர் நன்றிசொல்ல வேண்டும் என்கிறார் மனோ
[ Posted on : Sun Aug 17 5:27:48 BST 2008]
தேசிய அடையாள அட்டை மற்றும் சிறிலங்கா காவல்துறை பதிவு பத்திரம் எதுவும் இல்லாமல் கொழும்பு வீதியில் நடந்து கொண்டிருந்த இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை வெள்ளை வான் குழுவினர் கடத்தவில்லை என்றால் அதற்கு அவர் தனது குலதெய்வத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்.மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணே சன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.[விரிவு]
சந்திர கிரகணம் அதிகாலை
முழுமையாகத் தென்பட்டது
[ Posted on : Sun Aug 17 5:27:36 BST 2008]
இலங்கையில் இன்று ஞாயிற்றுக் கிழமை ஓகஸ்ட் 17 ஆம் திகதி 2.25 மணிக்கு தென் மேற்குத் திசையில் சந்திரகிரக ணத்தைத் தெளிவாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது.[விரிவு]
.வன்னியில் அகதிகள் எண்ணிக்கை
2 இலட்சத்தைத் தாண்டும் அபாயம்!
மனிதாபிமான உதவிகளைச் செய்யத் தயாராகுமாறு ஐ.நா. அழைப்பு
[ Posted on : Sat Aug 16 10:05:50 BST 2008]
.வன்னியில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெறும் மோதல்கள் காரணமாக இடம்பெயர்வோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருக்கின்றது.[விரிவு]